×

'துணிவு' படத்திற்காக சம்பவம் செய்துள்ள அனிரூத்.‌.. ஜிப்ரான் கொடுத்த செம அப்டேட் !

 

 அஜித்தின் 'துணிவு' திரைப்படத்திற்காக பிரபல இசையமைப்பாளரான அனிருத் பாடல் ஒன்றை பாடியுள்ளார்

உண்மையை சம்பவத்தை வைத்து உருவாகும் திரைப்படம் 'துணிவு'.  பஞ்சாப் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் இப்படம் எச் வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகவிருக்கிறது. அந்த வகையில் ‘துணிவு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் நவம்பர் மத்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜிப்ரான் இசையில் தாறுமாறாக உருவாகியுள்ள இப்பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிரூத் பாடியுள்ளார். கல்யாண் மாஸ்டர் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளாராம். ஏற்கனவே அஜித்தின் நாங்க வேற மாரி, அடிச்சி தூக்கு, ஆலுமா டோலுமா, அதாரு அதாரு ஆகிய பாடல்களை அனிரூத் பாடியுள்ளார். தரலோக்கலாக வெளியான இப்பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தது. அதேபோன்று துணிவு பாடலும் சூப்பர் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.