×

அஜித்திற்காக தரலோக்கலாக இறங்கிய அனிரூத்... ‘துணிவு’ படத்தின் தாறுமாறான அப்டேட் இதுதான் !

 

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

எச் வினோத்துடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த நடிகர் அஜித், தற்போது ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். ஹீரோ மற்றும் வில்லன் என நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு எகிற செய்கிறது. 

உண்மையை சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் கதைக்களத்தை கொண்டது. இந்த படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகவிருக்கிறது. அந்த வகையில் ‘துணிவு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் நவம்பர் மத்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையில் தாறுமாறாக உருவாகியுள்ள இப்பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிரூத் பாடியுள்ளார். கல்யாண் மாஸ்டர் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளாராம். ஏற்கனவே அஜித்தின் நாங்க வேற மாரி, அடிச்சி தூக்கு, ஆலுமா டோலுமா, அதாரு அதாரு ஆகிய பாடல்களை அனிரூத் பாடியுள்ளார். தரலோக்கலாக வெளியான இப்பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தது. அதேபோன்று துணிவு பாடலும் சூப்பர் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.