×

அருண் விஜய் ஆக்ஷனில் அதிரடி காட்டும் 'யானை' படத்தின் ட்ரைலர் வெளியானது!

 

அருண் விஜய் இயக்குனர் ஹரி காம்போவில் உருவாகியுள்ள யானை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

ஹரி மற்றும் அருண் விஜய் கூட்டணியில்  'யானை' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணி இணைந்துள்ள முதல் படம் இது தான். யானை படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா, யோகிபாபு, கே.ஜி.எப். பட வில்லன் ராமச்சந்திர ராஜு, தலைவாசல் விஜய், ராஜேஷ், இமான் அண்ணாச்சி, ‘குக் வித் கோமாளி’ புகழ், அபிராமி அம்மு உள்ளிட்டோரும் படத்தில் நடித்துள்ளனர். 

இப்படத்தை டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

ஹரியின் வழக்கமான பாணியில் கமர்ஷியல் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது யானை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சியில் தான் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் ட்ரைலரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். ட்ரைலர் பாதி செண்டிமெண்ட் காட்சிகள் நிரம்பியுள்ளது. பின்னர் அருண் விஜயின் மாஸ் ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வரும் ஜூன் 17-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

<a href=https://youtube.com/embed/kwBT-YLgmOU?autoplay=1><img src=https://img.youtube.com/vi/kwBT-YLgmOU/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="640">