×

‘நித்தம் ஒரு வானம்’... அசோக் செல்வன் பட டிரெய்லர் குறித்த அறிவிப்பு !

 

அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக இருக்கும் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, பிரபல தெலுங்கு நடிகை ஷிவாத்மிகா, ஷிவதா என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்து வருகிறார். நான்கு பெண்களுடன் பயணம் செய்யும் ஒரு ஹீரோவின் கதைத்தான் இந்த படம். அதாவது ஆட்டோகிராப் ஸ்டைலில் இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

வியகாம் 18 ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.