×

திட்டமிட்டபடி வெளியாகும் தனுஷின் ‘வாத்தி’.. ரிலீசை உறுதி செய்த படக்குழு !

 

தனுஷின் ‘வாத்தி’ படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் தற்போது ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாத்தி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் இப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தில் வாத்தியராக தனுஷ் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படம் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகின. ஆனால் திட்டமிட்டபடி பணிகள் நிறைவுபெறாததால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படம் திட்டமிட்டபடி டிசம்பர் 2-ஆம் தேதியே வெளியாகும் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.