×

அம்மா பின்னாடி பவ்யமாக நிற்கும் தனுஷ்..  செல்வராகவன் பகிர்ந்த புகைப்படம் வைரல் !

 

தனது குடும்பத்துடன் நடிகர் தனுஷ் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.  

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை அடுத்து முதல்முறையாக தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை சிதாரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 

இதற்கிடையே செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்திலும் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படம் விரைவில் இறுதிக்கட்டத்தை அடையவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது. 

இந்நிலையில் நடிகர் தனுஷ், தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் தனது அம்மாவின் பின்னால் மிகவும் பவ்யமாக தனுஷ் நிற்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதேநேரம் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்ததற்கு பிறகு அம்மாவுடன் தனுஷ் இருக்கும் இந்த புகைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.