×

காரோட்டியின் காதலி... இளங்கோ குமாரவேல் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ட்ரைலர் வெளியானது!

 

நடிகர் இளங்கோ குமாரவேல் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

நடிகர் இளங்கோ குமரவேல் கடைசியாக கமலஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தில் சிறப்பு ஏஜெண்டாக நடித்திருந்தார். தற்போது அவர் சிங்கப்பூரை சேர்ந்த இயக்குனர் சிவா என்பவரின் இயக்கத்தில் காரோட்டியின் காதலி என்ற படத்தில் நடித்துள்ளார்.

"ஏழை குடும்பத்தை சேர்ந்த நேர்மையான ஒரு டிரைவர் பணக்கார வீட்டில் பணியாற்றுகிறார். அவர்களைச் சுற்றி நடக்கும் உணர்வு பூர்வமான கதைகள் தான் இந்த படம். தஞ்சாவூர் அருகில் உள்ள கிராமத்தில் இந்த படத்தை படமாக்கினோம். படத்தின் சூட்டிங் வேலைகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது இறுதி கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஆடுகளம் படத்தில் நடித்த ஜானகி தேவி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். நீர்ப்பறவை, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த என் ஆர் ரகுநாதன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. படம் மிகவும் எதார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நடிப்பும் இயல்பாக இருக்கிறது. படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

<a href=https://youtube.com/embed/xdIzWP8_Cpk?autoplay=1><img src=https://img.youtube.com/vi/xdIzWP8_Cpk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Karotiyin Kadhali - Trailer | Siva R | N.R. Raghunathan | Elango Kumaravel | @TVS Motor Company ​" width="640">