×

விஜய்யுடன் இணையும் பிரபல மலையாள நடிகர்... ‘தளபதி 67’ குறித்து அதிரும் அப்டேட் !

 

விஜய்யின் ‘தளபதி 67’-ல் பிரபல மலையாள நடிகர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கவுள்ளார். விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. முழு நீள ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கிற இந்த படத்தில் நான்கு வில்லன்கள் நடிக்கவுள்ளனர். ஏற்கனவே சல்மான் கான், கௌதம் மேனன், பிரத்விராஜ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியானது. 

இதில் கால்ஷீட் பிரச்சனையால் பிரத்விராஜ் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி இப்படத்தில் இணையவுள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ‘பிரேமம்’ படத்தின் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிவின் பாலி, தமிழில் ‘நேரம்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.