×

விஷாலுடன் இணையும் பிரபல இயக்குனர..  ‘மார்க் ஆண்டனி’ சூப்பர் அப்டேட் !

 

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஷாலின் மிரட்டலான நடிப்பில் ‘மார்க் ஆண்டனி’ படம் உருவாகி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் விஷாலின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். 

இந்த படம் ஒரு ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், ஓய்.ஜி.மகேந்திரன், நடிகை அபிநயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் பிரபல இயக்குனரான செல்வராகவன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.