கதாநாயகியாகும் பிரபல பாடகி... ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பிரபல பாடகிய ராஜலட்சுமி புதிய படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக இருப்பவர் ராஜலட்சுமி. நாட்டுப்புற பாடல்கள் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ராஜலட்சுமியும், அவரது செந்தில் கணேஷும் இணைந்து ஏராளமான நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளனர். இதையடுத்து 'சார்லி சாப்ளின் 2' படத்தில் இடம்பெற்ற 'என்ன மச்சான்' என்ற பாடலின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்யடித்த 'புஷ்பா' படத்தில் சாமி என் சாமி பாடலை பாடினார். இந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் உள்ள ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்களை பாடி வருகிறார். பிஸியான பாடகியாக இருக்கும் ராஜலட்சுமி தற்போது 'சைலன்ஸ்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இந்த படத்தை நடிகர் கவுண்டமணி நடித்த 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற படத்தை இயக்கிய கணபதி பாலமுருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராதாரவி, விஜய் பாரத், மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் லிட்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தந்தை - மகள் இடையேயான பாசப் போராட்டத்தையும், பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்கும் படமாகவும் இப்படம் உருவாகி வருகிறது. நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் இளஞ்செழியன் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு இப்படத்தின் படபிடிப்பு இன்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ராஜலட்சுமியின் கணவர் செந்தில் கணேஷ், 'கரிமுகன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்தப் படம் போதிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.