×

கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘கிரிமினல்’.. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு !

 

 கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ‘கிரிமினல்’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் தட்சிணாமூர்த்தி ராமர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கிரிமினல்’. இந்த படத்தில் சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும், கௌதம் கார்த்தி குற்றவாளியாகவும் நடித்து வருகின்றனர். நடிகர் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

சாம் சிஎஸ் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பாரா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்டர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். மதுரையைப் பின்னணியாக கொண்டு நடக்கும் க்ரைம் த்ரில்லர் கதையாக இப்படம் உருவாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பை 40 நாளில் ஒரே கட்டமாக முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது என்ன மாதிரியான அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.