×

பிரம்மாண்டமாக நடக்கும் ‘வாத்தி’ ஆடியோ லாஞ்ச்... எப்போது தெரியுமா ? 

 

 தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 

முதல் முறையாக ‘வாத்தி‘ படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் வாத்தியராக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ‘தோழி பிரேமா', 'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.