×

ரிலீசுக்கு தயாரான ஜெயம் ரவியின் ‘அகிலன்’ .. வெளியானது புதிய அப்டேட் 

 

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்’. இந்த படத்தை ‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். இந்த படத்திற்காக மறைந்த பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திரைக்கதை எழுதியுள்ளார். 

இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். வடசென்னையை கலக்கிய கேங்ஸ்டர் ஒருவரின் உண்மை கதையாக இப்படம் உருவாகி வருகிறது.

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. நாளை அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையே இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.