×

கேங்ஸ்டராக மிரட்டப்போகும் ஜெயம் ரவி... ‘அகிலன்‘ படத்தின் முக்கிய அறிவிப்பு !

 

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘அகிலன்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‘பூலோகம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு கல்யாண் கிருஷ்ணன் மற்றும் ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்‘. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகிய இருகதாநாயகிகள்    நடித்துள்ளனர். மறைந்த பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திரைக்கதை எழுதியுள்ளார்.

,இந்த படத்தில் சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். 

வடசென்னையை கலக்கிய கேங்ஸ்டர் ஒருவரின் உண்மை கதை வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒன்று கடற்படை அதிகாரியாகவும், மற்றொன்று கேங்ஸ்டராகவும் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஒரு மோஷன் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.