×

ஜெயம் ரவியின் நடிப்பில் புதிய படம்.. எகிறும் எதிர்பார்ப்பு !

 

 ஜெயம் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக பணியாற்றி வந்த ஜெயம் ரவி, தற்போது அந்த படத்தை முழுவதுமாக முடித்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ‘அகிலன்’ படத்தை குறுகிய காலத்தில் ஜெயம் ரவி முடித்துள்ளார். 

இதையடுத்து அகமது இயக்கத்தில் ‘இறைவன்’ படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் ஜெயம் ரவி இணைந்து நடித்து வருகிறார். இரு இயக்குனர்களின் படங்களிலும் மாற்றிமாற்றி ஜெயம் ரவி பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில்  ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்திற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி புதிய படத்தின் அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

<a href=https://youtube.com/embed/WaQdGf9aXME?autoplay=1><img src=https://img.youtube.com/vi/WaQdGf9aXME/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">