×

விஷாலின் 'லத்தி' படத்தில் இணைந்த லிட்டில் மாஸ்ரோ... அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

 

விஷாலின் 'லத்தி' படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

சி.முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் போலீசாக நடித்து வரும் திரைப்படம் 'லத்தி'. போலீஸ் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்து வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் பிரபு நடித்து வருகிறார்.

த்ரில்லர் போலீஸ் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஜதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ஏற்கனவே இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது‌. இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற லிட்டில் மாஸ்ரோ யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டு நாளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.