×

‘பிரியாவின் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன்’ - ஜிவி பிரகாஷ் உருக்கம் !

 

இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை என ஜிவி பிரகாஷ் தெரிவித்ள்ளார். 

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கல்பந்தாட்ட வீராங்கணை பிரியா. 17 வயதாகும் இவர், ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் கால்பந்தாட்ட பயிற்சியின்போது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

ஆனாலும் பிரியாவிற்கு காலில் வலி குறையாததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் தசைகள் அழுகியதால் காலை அகற்றவேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ரத்த ஓட்டம் நின்றதால் அனைத்து பாகங்களும் செயலிழந்து இன்று திடீரென மரணமடைந்தார். இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரியாவின் மறைவையொட்டி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உருக்கமாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “என் Game என்னை விட்டு போகாது,Come back குடுப்பேன்” தங்கை ப்ரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.