×

‘ரஞ்சிதமே’ பாடல் காப்பியா ?... சர்ச்சைக்கு பதிலளித்த பாடலாசிரியர் விவேக் !

 

‘வாரிசு’ படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் காப்பி என்ற சர்ச்சைக்கு பாடலாசிரியர் விவேக் விளக்கமளித்துள்ளார். 

விஜய் நடிப்பில் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த பாடல் வேறொரு பாடலின் காப்பி என்று சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பாடல் சர்ச்சை குறித்து பாடலாசிரியர் விவேக் விளக்கமளித்துள்ளார். அதில் கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான ‘உளவாளி’ படத்தில் சிற்பி இசையமைத்த ‘மொச்சக்கொட்டை பல்லழகி’ பாடலை வைத்துதான் ‘ரஞ்சிதமே’ பாடல் உருவாகியுள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாடலாசிரியர் விவேக், கிராமிய பாடல் வரிகள் சார்ந்து விஜய்க்கு ஒரு பாடல் எழுதவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. 

அதனால் தமன் அவர்களிடம் இதுபோன்று பாடல் எழுதலாமா என கேட்டேன். அதற்கு தமனும் ஓகே சொன்னதால் இந்த பாடல் உருவானது. ஃபோக்ஸ் சந்தத்தில் ஒரு பாடல் உருவாக வேண்டும் என்று நினைத்தோம். அதன்படியே ரஞ்சிதமே பாடலும் உருவானது. ஆனால் ரஞ்சிதமே போன்று மொச்சக்கொட்டை பல்லழகி, தஞ்சாவூர் மண்ணை எடுத்து, மக்க கலங்குதப்பா உள்ளிட்ட பாடல்கள் உள்ளன. எல்லாமே கிராமிய பாடல்கள் என்பதால் அப்படி தோன்றுகிறது. ரஞ்சிதமே பாடல் முற்றிறும் வேறு டியூனில் இருக்கும் என்று விளக்கமளித்துள்ளார்.