×

சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘இரை’.. கமலிடம் நேரில் வாழ்த்து பெற்ற படக்குழுவினர் !

 

சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘இரை’ வெப் தொடர் குழுவினர் நடிகர் கமலை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய வெப் தொடர் ‘இரை‘.  ராதிகாவின் ராடன் மீடியா வெர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் தொடரை  ‘கடாரம் கொண்டான்’ படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

சரத்குமாரின் வழக்கமான ஆக்ஷன் அதிரடியில் இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது. த்ரில்லர் வெப் தொடராக உருவாகியுள்ள இது இன்று ஆஹா ஓடிடித்தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் இப்படம் வெளியாவதையொட்டி படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா மற்றும் படக்குழுவினர் கமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இரை’ வெப் தொடர் இன்று வெளியாவதையொட்டி கமலிடம் வாழ்த்து பெற்றோம். அப்போது ‘இரை’ வெப் தொடர் வெற்றிப்பெற கமல் வாழ்த்தினார் என்று குறிப்பிட்டுள்ளார்.