×

அசத்தும் சரவணா ஸ்டோஸ் ஒனர்... 'தி லெஜண்ட்' எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் !

 

சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

பிரபல நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான சரவணன் அருள் நடிக்கும் திரைப்படம் ‘தி லெஜண்ட்’. 
இந்த படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி என்ற இரண்டு இயக்குனர்கள் இணைந்து இயக்கி வருகின்றனர். இந்த படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவியல் சார்ந்து இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து வரும் மே 29ம் தேதி இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மிக பிரமண்டமாக நடைபெற உள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் அசுத்தம் சரவணன் அருள் உள்ளார்