அட்டகாசமாக வெளியாகும் செல்வராகவனின் 'பகாசூரன்'... ரிலீஸ் தேதி அறிவிப்பு !
செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள 'பகாசூரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனராக செல்வராகவன் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பகாசூரன்’. இந்த படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நட்டி நடித்துள்ளார்.
இந்த படத்தில் தாராக்ஷி கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, கே.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, சசிலையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தை மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.