×

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ‘புஷ்பா’ நடிகர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

 

 சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் ‘புஷ்பா’ நடிகர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரின்ஸ்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தில் ‘விருமன்’ நாயகி அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் பிரபல இயக்குனர் மிஷ்கின் மற்றும் சரிதா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. 

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த நிலையில் மழையால் சில நாட்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ‘புஷ்பா’ படத்தின் மூலம் பிரபலமான சுனில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.