10 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் படம்.. அட்டகாசமான அப்டேட்

சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படம் 10 மொழிகளில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலாவின் 'வணங்கான்' படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். பீரியட் படமாக உருவாகும் இப்படம் இரு பாகங்களாக உருவாக உள்ளது. பிரம்மாண்டமாய் தயாராகும் இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளன.
இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மாயாவி, ஆறு, சிங்கம் 1, சிங்கம் 2 ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மீண்டும் சூர்யாவின் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதையடுத்து விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்படம் 10 மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி, மராத்தி உள்ளிட்ட பலமொழிகளில் இப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.