×

'விக்ராந்த் ராணா' டீசரை வெளியிடும் மாஸ் தமிழ் நடிகர்... படக்குழு அறிவிப்பு !

 

 'விக்ராந்த் ராணா' திரைப்படத்தின் டீசரை பிரபல தமிழ் நடிகர் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சுதீப். தமிழில் 'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். இதைத்தொடர்ந்து விஜய்யின் 'புலி' படத்திலும் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். தற்போது கன்னடத்தில் பிரம்மாண்ட படம் ஒன்றில் நடித்துள்ளார். சதீப்பின் 25 ஆண்டுகால திரைவாழ்வை சிறப்பிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தை அனூப் பந்தாரி இயக்கியுள்ளார். 

 

இதில் ஹீரோயினாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அந்த ஆண்டே வெளியாக வேண்டிய இப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கொரானா காரணமாக வெளியாகவில்லை. இதனால் இந்தப் படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி காலை 9.55 மணிக்கு வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் டீசரை நடிகர் சிம்பு வெளியிட உள்ள மாஸ் தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.