×

ஜிவி பிரகாஷ் இசையில் தாறுமாறாக உருவாகும் ‘தங்கலான்’.. ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் !

 

விக்ரமின் ‘தங்கலான்’ படத்தின் ஆடியோ உரிமை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது.  

இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மலையாள நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் விக்ரம் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் ஆடியோ உரிமையை டைம் மியூசிக் பெற்றுள்ளது. சுமார் 5 கோடிக்கு ஆடியோ உரிமையை பெறப்பட்டுள்ளதால் இப்படத்தின் பாடலுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.