×

விஜய்யின் ‘வாரிசு’  தெலுங்கு ரீமேக்கா ?... புதிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி !

 

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கு படத்தின் ரீமேக் என்று வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வாரிசு'. தில்ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுதவிர சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷ்யாம், குஷ்பூ உள்ளிட்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

 

இந்த படத்தில் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. வரும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் தெலுங்கு படம் ஒன்றின் ரீமேக்காக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி வம்சி ஏற்கனவே இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படமான 'மகரிஷி' படத்தின் ரீமேக்காக வாரிசு உருவாகி வருவதாக ரசிகர்கள் சந்தேகம் எழுந்து வருகின்றனர். 

மகரிஷி படத்திற்கும் வாரிசு படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் சில கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகேஷ் பாபு கதாபாத்திரத்தில் விஜய்யும், பூஜா ஹெக்டே கதாபாத்திரத்தில் ராஷ்மிகாவும், நரேன் கதாபாத்திரத்தில் ஷ்யாமும் நடித்துள்ளதாக தெரிகிறது. இந்த இரண்டு படங்களையும் பொருத்திப் பார்த்தால் ஒரே மாதிரியாக இருப்பதாக ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதை வைத்தே விஜயின் வாரிசு படம் தெலுங்கு ரீமேக் ஆக உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மகேஷ்பாபுவின் ஒக்கடு மற்றும் போக்கரி ஆகிய படங்கள் விஜய் நடிப்பில் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது என்பது  குறிப்பிடத்தக்கது.