×

‘தளபதி 67’ திரைப்படத்தில் விஜய்க்கு 4 வில்லன்கள் - வெளியான முக்கிய தகவல்

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக 4 வில்லன்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்டுகள் வர தொடங்கியுள்ளன. ‘விக்ரம்’ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளதால் ‘தளபதி 67’ படம் மிகுந்த கவனம் பெறுகிறது. க்ரைம் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தில் 40 வயதுடைய கேங்ஸ்டராக விஜய் நடிக்கவுள்ளார். மும்பை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படவிருக்கிறது. 

இந்நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக 4 முக்கிய பேர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளார். இதேபோல் நடிகர் அர்ஜுன், டைரக்டர் கவுதம் மேனன், இயக்குநர் மிஷ்மின் உள்ளிட்டோரும் விஜய்க்கு வில்லன்களாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நான்கு முக்கிய பிரபலங்கள் விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ளதால் தளபதி 67 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.