×

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ ரிலீஸ் எப்போது ?... முக்கிய அறிவிப்பு வெளியீடு !

 

 விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் ‘கட்டா குஸ்தி’ படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஷ்ணு விஷால். அதனால் இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரித்து வெளியிடுகின்றனர்.

மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் குஸ்தி வீரராக விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். அதனால் இந்த படத்திற்கு ‘கட்டா குஸ்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. செல்லா அய்யாவு  இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமியும், கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.