×

யோகிபாபு பட டீசரை வெளியிடும் பிரபல நடிகை... படக்குழு அறிவிப்பு !

 

யோகிபாபு நடிப்பில் உருவாகும் 'பூமர் அங்கிள்' படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

காமெடி கதாபாத்திரங்களை தாண்டி தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. அந்த வகையில் யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பூமர் அங்கிள்’. இந்த படத்தில் யோகிபாபுடன் இணைந்து பிக்பாஸ் புகழ் ஓவியாவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இவர்களுடன் ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம்.எஸ்.சுவதீஸ் இயக்கி வருகிறார். தரம் பிரகாஷ் இசையில் உருவாகும் இப்படத்திற்கு சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

 

அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏஜென்ட் நேசமாக யோகிபாபுவும், ஏஜென்ட் வேம்புலியாக ரோபோ ஷங்கரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை நடிகை வாணிபோஜன் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.