×

அயலான் படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

 

டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தை ‘நேற்று, இன்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி வருகிறார். சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகவுள்ள இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.  ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அனிமோஷன் பணிகள் அதிகமாக இருப்பதால் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிரித்திருந்த நிலையில், தற்போது பொங்கல் பண்டிகைக்கு நாளை வெளியாகிறது

<a href=https://youtube.com/embed/IfWsi-7dorQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/IfWsi-7dorQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில், படத்தின் விளம்பரத்திற்காக, படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனும், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து நடனமாடிய பாடல் வெளியாகியுள்ளது.