×

சந்திரமுகி 2-ம் பாகத்திலிருந்து புதிய பாடல் வெளியானது

 

சந்திரமுகி 2-ம் பாகத்திலிருந்து தோரி போரி என்ற புதிய பாடல் வெளியானது. 

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத்  நாயகியாக நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்நிலையில், 'சந்திரமுகி -2' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தோரி போரி' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான பாடலை, ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

<a href=https://youtube.com/embed/zRSb3N1qzh8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/zRSb3N1qzh8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.