×

இறுகப்பற்று திரைப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியானது

 

விக்ரம் பிரபு நடித்துள்ள இறுகப்பற்று திரைப்படத்திலிருந்து மாயா மாயா என்ற புதிய பாடல் வெளியாகியுள்ளது. 

'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்' மற்றும் 'டாணாக்காரன்' உள்ளிட்ட படங்களை தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோவின் அடுத்த தயாரிப்பு ‘இறுகப்பற்று’. யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களஇல் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல் வரிகளை எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

<a href=https://youtube.com/embed/D6_uXzbAu4Y?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/D6_uXzbAu4Y/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில், இறுகப்பற்று திரைப்படத்திலிருந்து மாயா மாயா என்ற புதிய பாடல் சமூக வலைதலங்களில் வெளியாகியுள்ளது. அக்டோபர் 6-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.