புதிய சூப்பர் ஹீரோ உருவாகிறான்... ராகவா லாரன்ஸின் பான் இந்தியன் திரைப்படம்
Oct 29, 2024, 19:30 IST
நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் 25வது படத்தின் போஸ்டர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ், தற்போது "துர்கா" மற்றும் "அதிகாரம்" ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் நடிக்க இருக்கும் 25வது திரைப்படத்திற்கு "காலபைரவா" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், இதில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் உள்ளது.