×

 மும்பை படப்பிடிப்பை முடித்த ஆதி... ‘சப்தம்’ புதிய அப்டேட் !

 

 ஆதியின் ‘சப்தம்’ படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஈரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிக்கும் திரைப்படம் ‘சப்தம்’. இந்தப் படத்தை 7ஜி ஃபிலிம்ஸ் மற்றும் அறிவழகனின் ஆல்பா பிரேம் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.  ‘ஈரம்’ படத்திற்கு சிறந்த பின்னணி இசையை கொடுத்த தமன் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தில் லஷ்மி மேனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, லைலா, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வித்தியாசமான கதைக்களத்தில் ‘ஈரம்’ பட பாணிலேயே இப்படம் உருவாகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இதையடுத்து பல கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மும்பை படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட விரைவில் தொடங்கவுள்ளது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது.