×

நடிகர் ‘விஜய் படத்தில் அமீர்கானா? – வெளியான மாஸ் தகவல்.

 

தளபதி விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் தயாராகி வருகிறது. படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. அடுத்ததாக விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி அமைக்க உள்ளார்.  அந்த படம் தற்காலிகமாக ‘தளபதி 68’ என் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது.

தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு மல்டி ஸ்டார் படமாக உருவாக்க உள்ளாராம். விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். அதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க திட்டமிட்ட நிலையில் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். அவருக்கு பதில் சிம்ரன் அல்லது ஜோதிகா ஆப்ஷனாக உள்ளனர். மற்றுமொரு  விஜய்க்கு ஜோடியாஜ பிரியங்கா நடிக்க உள்ளாராம். தொடர்ந்து பிரஷாந்த், பிரபு தேவா, ஜெய் என பல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் அமீர்கான் மற்றும்  ஷாருக்கானிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் கதாப்பாத்திரம் ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரம் போல இருக்குமாம்.