×

ஆமீர்கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ ட்ரெய்லர் ரிலீஸ்...!

 

ஆமீர்கான் நடித்துள்ள ‘சிதாரே ஜமீன் பர்’ பாலிவுட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் ஆமீர்கான் தயாரித்து நடித்த படம் ‘தாரே ஜமீன் பர்’ (taare zameen par). டிஸ்லெக்ஸியா எனப்படும் கற்றல் குறைபாடு குறித்த விழிப்புணர்வை நெகிழ்ச்சியான வகையில் பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது.இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார் ஆமீர்கான். ‘சிதாரே ஜமீன் பர்’ (Sitaare Zameen Par) என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெனிலியா நடித்துள்ளார். ஃபுட் பால் கோச்சாக ஆமீர்கான் நடித்துள்ளார். ஆமீர்கான் தயாரித்துள்ள இந்தப் படத்தை பிரசன்னா இயக்கியுள்ளார். படம் வரும் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.  <a href=https://youtube.com/embed/YH6k5weqwy8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/YH6k5weqwy8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

ட்ரெய்லரை பொறுத்தவரை உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அடங்கிய குழுவுக்கு ஃபுட்பால் பயிற்சியாளராக இருக்கிறார் ஆமீர்கான். மாற்றுத்திறன் கொண்ட இந்த குழுவினருக்கு ஃபுட் பால் எளிதில் பிடிபடவில்லை. இறுதியில் அவர்களை எப்படி கால்பந்தாட்ட அணியில் பயிற்சி கொடுத்து வெல்ல வைக்கிறார் என்பது கதையாக இருக்கும் என தெரிகிறது.