×

கல்யாணத்துல வாத்தி கமிங்க் பாட்டுக்கு வெறித்தனமா டான்ஸ் ஆடிய ஆரவ்… வைரல் வீடியோ!

நடிகர் ஆரவ் தனது திருமணத்தில் வாத்தி கமிங்க் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் ஆரவ் மற்றும் ராஹி ஜோடிக்கு கடந்த 6-ம் தேதி திருமணம் முடிந்தது. அதையடுத்து திருமணத்தில் பல கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவியது. தற்போது ஆரவ் தனது திருமண கொண்டாட்டத்தில் மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங்க் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல்திருமண ஜோடி இருவரும் கேக்
 

நடிகர் ஆரவ் தனது திருமணத்தில் வாத்தி கமிங்க் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் ஆரவ் மற்றும் ராஹி ஜோடிக்கு கடந்த 6-ம் தேதி திருமணம் முடிந்தது.  அதையடுத்து திருமணத்தில் பல கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவியது.

தற்போது ஆரவ் தனது திருமண கொண்டாட்டத்தில் மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங்க் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல்திருமண ஜோடி இருவரும் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி விடும் விடியோவும் வைரலாகப் பரவி வருகிறது.

மாடலிங் துறையில் இருந்த ஆரவ் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட பின்னர் மிகவும் பிரபலமானார். அதில் வெற்றியும் பெற்றார். நடிகை ராஹி கவுதம் மேனன் இயக்கத்தில் ஜோஸுவா: இமை போல் காக்க படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் கூட ராஹியை இமை போல் காப்பேன் என்று ஆரவ் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.