×

“இமை போல் காப்பேன்”…புது மனைவி ராஹிக்கு ஆரவ் வாக்குறுதி!

மாடலிங் துறையில் இருந்த ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு தற்போது படவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஓ காதல் கண்மணி, சைத்தான் படங்களிலும் சிறு வேடங்களில் நடித்துள்ளார். மார்க்கெட் ராஜா படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை ராஹி கவுதம் மேனன் இயக்கத்தில் ஜோஸுவா: இமை போல் காக்க படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரவ் மற்றும் ராஹி ஜோடிக்கு கடந்த 6-ம் தேதி திருமணம் முடிந்தது. இவர்கள்
 

மாடலிங் துறையில் இருந்த ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு தற்போது படவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஓ காதல் கண்மணி, சைத்தான் படங்களிலும் சிறு வேடங்களில் நடித்துள்ளார். மார்க்கெட் ராஜா படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

நடிகை ராஹி கவுதம் மேனன் இயக்கத்தில் ஜோஸுவா: இமை போல் காக்க படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரவ் மற்றும் ராஹி ஜோடிக்கு கடந்த 6-ம் தேதி திருமணம் முடிந்தது. இவர்கள் திருமணத்தில் பல கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

தற்போது ஆரவ் தனது புதுமனைவிக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். ராஹியை இமை போல் காப்பேன் என்று தெரிவித்துள்ளார். ஜோஸுவா: இமை போல் காக்க படத்தில் ராஹி நடித்துள்ளதால் அதை குறிப்பிடும் விதமாக ஆரவ் தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.