×

நாகஜென்மத்தை அடிப்படியாக வைத்து உருவாகும் புதிய படம்... கதாநாயகியாக நடிக்கும் அபர்ணதி!

 

நடிகை அபர்ணதி நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 


நடிகை அபர்ணதி தேன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர் நடிப்பது பலரால் பாராட்டப்பட்டது. அதையடுத்து தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படத்தில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் மாய புத்தகம் என்ற புதிய படத்தில் அபர்ணதி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் அசோக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  ராம ஜெயப்பிரகாஷ் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.

நாக ஜென்மத்தை அடிப்படையாக வைத்து இந்த புதிய படம் உருவாகி வருகிறது.

"நாகப்பாம்புகள் மாரு ஜென்மம் வாழ்க்கையின் வடிவம் என்று நான் நம்புகிறேன், ஆனால் பல பிறவிகளுக்கு இடையே உள்ள ஆத்மாக்களுக்கான பாத்திரங்கள். என் படத்தில், நாகப்பாம்புகளில் இருக்கும் ஆன்மாக்கள் மட்டுமே திரும்பத் திரும்ப பிறக்கும், அதுபோன்ற ஒரு ஆன்மாவையும், அது வெவ்வேறு தலைமுறைகளுக்கு இடையே கடந்து செல்லும் கதாபாத்திரங்களையும் சுற்றியே கதை நகர்கிறது. எனக்கு கிளாசிக்கல் தோற்றம் உள்ள மற்றும் ஆக்‌ஷனும் செய்யக்கூடிய ஒருவர் வேண்டும். நாகப்பாம்பின் உடல்மொழியை அவர்களின் நடிப்பில் படம்பிடிக்கக்கூடிய நடிகையையும் தேடிக்கொண்டிருந்தேன். நாங்கள் பல நடிகைகளுடன் ஒரு டெஸ்ட் ஷூட் செய்தோம், நாங்கள் சோதித்தவர்களில் அபர்னதி சிறப்பாக நடித்தார்." எனவே அவரை கதாநாயகியாக நடிக்க முடிவு செய்தோம் என்று படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். 

தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.