'வேட்டையன்' படத்தில் 'ஸ்வேதா' கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அபிராமி - வீடியோ
ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் "மனசிலாயோ" சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்துள்ள கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் படக்குழு வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில் வேட்டையன் படத்தில் நடிகை அபிராமி 'சுவாதி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. வேட்டையன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் வெளியான இப்படத்தின் பிரீவியூ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.