×

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. மேனேஜரை மாற்றிய பிக்பாஸ்.. ப்ரோமோ 

 


பிக் பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் டாஸ்க்கில், பவித்ரா ஜனனி மேனேஜராக இருந்து வரும் நிலையில், அவரை மாற்ற வேண்டும் என்ற அடுக்கடுக்கான புகார்கள் வந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 16-வது நாளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய டாஸ்க்கில் பவித்ரா ஜனனி மேனேஜராக உள்ளார் என தெரிகிறது.


இந்த நிலையில், மேனேஜர் குறித்து புகார்களை கரும்பலகையில் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏராளமான புகார்கள் அதில் எழுதப்பட்டுள்ளன. இதையடுத்து, பிக் பாஸ் மேனேஜர் மீது அதிக புகார்கள் இருப்பதாக கூறுகிறார்.


இதனை அடுத்து, மேனேஜர் இடமாற்றம் செய்யப்படுகிறார் என்று பிக் பாஸ் அறிவித்த நிலையில், பவித்ரா ஜனனி சக போட்டியாளர்களிடம் பேசும்போது, "அவர்களுக்கு மோட்டிவ் மேனேஜரை மாற்ற வேண்டும் என்பதுதான்" என்று அழுதுகொண்டே கூற, மற்ற போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறுவதுடன் இன்றைய புரோமோ முடிவுக்கு வருகிறது.