×

 ஒரே கட்டமாக 70 நாட்கள் படப்பிடிப்பு... அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ முக்கிய அப்டேட்

 

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 

ஏ.ஏல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே’. இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக அருண் விஜய் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இதற்காக மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. 

இதைத்தொடர்ந்து மீண்டும் லண்டனில் தொடங்கிய படப்பிடிப்பு ஒரே கட்டமாக 70 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது. தற்போது தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ள நிலையில் வரும் சம்மரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.