×

'அருண் விஜய்'யின் ‘அச்சம் என்பது இல்லையே’ திரைப்படத்தின் BTS  புகைப்படங்கள் வெளியீடு.

 

அருண் விஜய் நடிப்பில் அட்டகாசமாக தயாராகிவரும் திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே’. இந்த திரைப்படத்தை அஜித்தின் ‘கிரீடம்’ படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமாகி பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குநரான ஏ.எல். விஜய் இயக்குகிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை எமி ஜாக்சன் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது படத்தின் BTS  புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல்  இந்த படத்தில்  நிமிஷா சஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது படப்பிடிப்பில் அருண்விஜய், எமி ஜாக்சன், ஏ. எல் விஜய் ஆகியோர் எடுத்துக்கொண்ட மாஸ்ஸான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அருண் விஜய்யின் பிறந்த நாளில் படக்குழு வெளியிட்ட புகைப்படத்தில் அவர் ஒரு குழந்தையோடு இருக்கும் புகைப்படம் வெளியானது அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் போலீச் ஸ்டேஷன் மாதிரியாக தெரிகிறது, இந்த படத்தில் எமி ஒரு இன்வஸ்டிகேர்ஷன் அதிகாரியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்த புகைப்படங்கள் பக்கா மாஸ்ஸாக இருப்பதாக நெடிசன்ஸ் தெரிவித்து வருகின்றனர்.