×

முகத்தில் கடுமையான காயம்.. விஜய் ஆண்டனிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு ? 

 

 நடிகர் விஜய் ஆண்டனிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பிச்சைக்காரன் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியா நாட்டில் உள்ள லங்கா தீவில் நடைபெற்றது. 

அதில் விஜய் ஆண்டனி மற்றும் கதாநாயகி காவ்யா தாப்பர் இணைந்து நடிக்கும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. இந்த காட்சியின் படி கடலில் ஜெட் ஸ்கையை விஜய் ஆண்டனியும், காவ்யா தாப்பாரும் ஓட்டவேண்டும். அப்படி அந்த காட்சியை படமாக்கும் போது ஜெட் ஸ்கை மீது மற்றொரு ஜெட் ஸ்கை மோதியது. 

இந்த விபத்தில் விஜய் ஆண்டனியின் முகம், உதடு, பற்களில் பலத்த காயம் ஏற்பட்டது. நடிகை காவ்யா தாப்பருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து உடனடியாக கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அபாய கட்டத்திலிருந்து மீண்ட விஜய் ஆண்டனி, தற்போது நலமுடன் உள்ளார். 

ஆனாலும் முகத்தில் அதிக காயம் இருப்பதால் அவருக்கு பிளாஸ்டிக் சிகிச்சை செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால் ஜெர்மனியில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு விஜய் ஆண்டனி அழைத்து செல்லவிருக்கிறார். இது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.