×

ஆதியுடன் இணைந்த பிரபல நடிகை... ‘சப்தம்’ புதிய அப்டேட் !

 

ஆதியின் ‘சப்தம்’ படத்தில் நடிகை லட்சுமி மேனன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹாரர் த்ரில்லரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஈரம்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படத்தை அறிவழகன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் ஆதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அறிவழகன் மற்றும் ஆதி கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ‘சப்தம்‘. 

இந்தப் படத்தை 7ஜி ஃபிலிம்ஸ் மற்றும் அறிவழகனின் ஆல்பா பிரேம் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன.  ‘வாரிசு’ படத்திற்கு இசையமைத்த தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ‘ஈரம்’ படம் போன்றே இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. 

கடந்த ஆண்டு டிசம்பர் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை லட்சுமி மேனன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் லட்சுமி மேனன், ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர்.  அதன்பிறகு பாண்டியநாடு, ஜிகர்தாண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.