×

அஜித் பிறந்தநாளில் சம்பவம் கன்பார்ம்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் !

 

அஜித் பிறந்தநாளையொட்டி நாளை 'Ak62' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

‘துணிவு’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடிக்கும் 62வது படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டே இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கதையில் உள்ள‌முரண்பாடு காரணமாக அவர் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 

 

இதையடுத்து அஜித்தின் 62வது படத்தை இயக்க பல இயக்குனர்களை லைக்கா பரிசீலனை செய்த நிலையில் கடைசியாக மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்ததது. இவர் ‘தடம்’, ‘கலகத்தலைவன்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். மகிழ் திருமேனி சொன்ன கதை அஜித் மற்றும் லைக்கா தரப்பிற்கு பிடித்துவிட்டதால் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அனிரூத் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.‌ இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.‌ அஜித்தின் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. அந்த படத்திற்கு 'விடாமுயற்சி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.