×

ஓட்டல் செஃப்-ஆக மாறிய நடிகர் அஜித்... எங்கு தெரியுமா ? நீங்களே பாருங்க.. 

 

 நடிகர் அஜித் ஓட்டல் ஒன்றில் செஃப்-ஆக மாறியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.  

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். கடைசியாக எச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்தார். அதன்பிறகு அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையே பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் அஜித். அதனால் தான் ‘துணிவு’  படத்தின் படப்பிடிப்பின் போது உலக பைக் பயணத்தை தொடங்கி சுற்றுப்பயணம் செய்தார். 

இதையடுத்து மீண்டும் தனது பைக் பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில் கார்கில், லடாக், ஜம்மு, ஸ்ரீநகர், மணாலி, ரிஷிகேஷ், ஹரித்துவார் உள்ளிட்ட பகுதிகள் வழியாக அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இது குறித்து புகைப்படங்கள் அவ்வெவ்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தின் போது நேபாளம் நாட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார் அஜித். அங்கு ஓட்டலின் கிச்சனுக்கு சென்று செப்பாக மாறி பிரபல சமையல் கலைஞர்களுடன் சமையல் செய்து அசத்தியுள்ளார். அஜித்தின் சமையலை சாப்பிட்டு சமையல் கலைஞர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். இது குறித்து புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.