நடிகர் அகிலின் புதிய பட டைட்டில் கிளிம்ப்ஸ் நாளை ரிலீஸ்...!
Apr 7, 2025, 13:25 IST
நடிகர் அகிலின் புதிய பட டைட்டில் கிளிம்ப்ஸ் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக உள்ள நாகார்ஜுனாவின் மகன் அகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகனாக இதுவரை 5 படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ’ஏஜெண்ட்' கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இவரது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் முரளி கிஷோர் இயக்க உள்ளார்
அதன்படி, இப்படத்தின் பெயர் மற்றும் கிளிம்ப்ஸ் அகிலின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.