நடிகர் அதர்வா பிறந்தநாள்... இயக்குநர் சுதா கொங்கரா சிறப்பு வாழ்த்து...!
May 7, 2025, 15:20 IST
நடிகர் அதர்வாவின் பிறந்தநாளை முன்னிட்டு பராசக்தி படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோ வெளியிட்டு இயக்குநர் சுதா கொங்கரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது. இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.