“விஷால் தாலி கட்டியவுடன் நானும் தாலி கட்டுவேன்”- அதர்வா கலகல பேட்டி
அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதி திரைக்கு வர உள்ள படம் தணல். இதில் அதர்வாவிற்கு ஜோடியாக தமிழில் பிரம்மன் மாயவன் போன்ற படங்களில் நடித்த லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். மேலும் இதில் அஸ்வின் ககுமனு, ஷாரா, செல்வா, பரணி, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லட்சுமி பிரியா, பாரத், மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் அதர்வா, அஸ்வின் ககுமனு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அதில் பேசிய நடிகர் அதர்வா, படம் தொடர்பான சுவாரசிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் நான் WWE பார்த்து வளர்ந்த பையன். ஆக்சன் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆக்சன் காட்சிகளை படமாக்கப்படும் போது என்னை அறியாமல் ஒரு எனர்ஜி வந்துவிடும் என்றார்.
இறுதியாக, நடிகர் விஷால் தனது பிறந்தநாள் அன்று எனக்கு அடுத்து பேச்சுலராக உள்ள நடிகர் அதர்வாவிற்கு தான் திருமணம் செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். அதற்கு உங்கள் பதில் என்ன என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அதர்வா, விஷால் சார் எப்பொழுது தாலி கட்டுகிறாரோ அதன் பிறகு தான் நான் தாலி கட்டுவேன் என நகைச்சுவையாக கூறினார்.